ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்து 155வது பிறந்தநாள் விழா: மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை..
தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 155வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும், தூத்துக்குடி நகருக்கு வல்லநாட்டில் இருந்து முதல்முதலாக குடிநீர் கொண்டு வந்தவருமான ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்தின் 155வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சிமேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநகராட்சி மண்டலத் தலைவர் அன்னலட்சுமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், மகளிர் தொண்டரனி துணை அமைப்பாளர் பெல்லா, தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, பாலகுருசாமி, ராஜாமணி, டென்சிங், லியோ ஜான்சன், பொன்ராஜ், சாமி, ரவீந்திரன், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, நாகேஸ்வரி, வைதேகி, பவாணி மார்ஷல், ரெக்ஸிலின், மெட்டில்டா, கந்தசாமி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர், வட்டப்பிரதிநிதி பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments