Breaking News

சிதம்பரம் அருகே கை ரேகை ஜோசியம் பார்ப்பதாக கூறி 15,000 ரொக்கப் பணத்தை ஆட்டையை போட்ட இளைஞர்கள்..

 


சிதம்பரம் அருகே மேலத்திருக்கழிப்பாளை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி தெருவை சேர்ந்தவர் சாந்தி 45 இவர் வீட்டிற்கு இரண்டு இளைஞர்கள் கைரேகை பார்த்து ஜோசியம் பார்ப்பதாக வீட்டிற்குள் வந்தனர், அப்போது சாந்தி கைரேகை காண்பித்த போது உனது வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறி 3000 ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது, அதனை அடுத்து தண்ணீர் எடுத்து வருமாறு கூறிய நபர்கள் சாந்தியின் மணிபர்ஸில் இருந்த 15000, ரொக்க பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்,

தண்ணீர் எடுக்க சென்ற சாந்தி திரும்பி வந்து பார்க்கும்போது அந்த இரண்டு இளைஞர்களும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார், மேலும் அவரது மணி பரிசை பார்த்த போது அவரது மணிபரிசில் இருந்த ரொக்க பணமும் இல்லாததை கண்டு அங்கும் இங்கும் தேடி அலைந்து உள்ளார் ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை அவர்களுடன் வந்த மற்ற இரண்டு இளைஞர்கள் வேறு பகுதியில் இருப்பதை உறுதி செய்த சாந்தி அவர்களை பிடித்து வைக்குமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து பக்கத்து கிராமத்தில் கிராம மக்கள் மற்ற இளைஞர்களை பிடித்து வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சிதம்பரம் அண்ணாமலை காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தபோது நாங்கள் திருடவில்லை என ஜோசியம் பார்க்க வந்த இளைஞர்கள் கூறியதால் அந்த கிராமத்திற்கு யார் சென்று வந்தார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது திருவாரூர் மாவட்டம் மருதபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் 32 விக்னேஷ் 22 ஆகியோர் சென்று வந்ததாக தெரியவந்தது இதனை அடுத்து அவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் இருவரும் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இந்த இருவரையும் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர், கைரேகை ஜோசியம் பார்ப்பதாக கூறி கிராம பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இந்த இளைஞர்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு அந்த குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!