Breaking News

மாநாடு நடத்த இடம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்த திருமா..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 2-தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் நடந்த இடத்தின் உரிமையாளரும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான காங்கிரஸ் நிர்வாகி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி நேரில் வந்து மாநாடு நடத்த இடம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த திருமாவளவன் மஞ்சக்கொல்லை விவகாரம் விடுதலை சிறுத்தைகளின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய நாளிலிருந்து தொடர்ந்து பல மாதங்களாக நீடிக்கிறது பொது இடத்தில் பல கட்சிகளின் கொடி பறக்கும் இடத்தில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி பறக்கிறது எனது பிறந்த நாளை ஒட்டி ஆகஸ்ட் மாதம் அந்த கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டது ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அந்த கொடியை அறுத்திருக்கிறார்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் இந்தப் பிரச்சினையை பெரியதாக்க வேண்டாம் சமாதானம் ஆகலாம் இனிமேல் அது நடக்காது என்று சொன்னார்கள் அதைக் கேட்டு சிறுத்தைகள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை அப்படியே விட்டுவிட்டார்கள் கொடியேற்றவும் முயற்சிக்கவில்லை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று விட்டு விட்டார்கள் ஆனால் அக்டோபர் மாதம் மொட்டையாக நின்ற கொடி கம்பத்தை அடியோடு அறுத்து தூக்கி எறிந்து விட்டார்கள் அது மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை பிறகு நவம்பர் 1ஆம் தேதி உறையூர் என்ற இடத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது மஞ்சகொல்லை வாண்டியார்குப்பம் கிராமங்களை சேர்ந்த வன்னிய சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஆறு, ஏழு பேர் 3 இருசக்கர வாகனத்தில் சென்று உறையூர் தலித் குடியிருப்பு பகுதியில் அமர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள் அதைப் பார்த்த உறையூர் தலித் இளைஞர்கள் ஏன் இந்த ஊர் பக்கத்தில் வந்து குடிக்கிறீர்கள் பக்கத்தில் சென்று குடியுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் சின்ன சின்ன பிரச்சனை இது கட்சி பிரச்சினை அல்ல அந்த இளைஞர்களை இவர்கள் ஆறு ஏழு பேரும் சேர்ந்து அடித்திருக்கிறார்கள் இதை தெருவில் இருந்து பார்த்த தலித் மக்கள் சில பேர் ஓடி வந்து தடுத்ததில் செல்லதுரை என்பவர் மட்டும் அங்கு தனியே சிக்கிக் கொள்ள மற்றவர்கள் ஓடிப் போய் விட்டார்கள் அப்போது அவர்கள் தாக்கியதிலே அவர் காயப்பட்டிருக்கிறார் அது கண்டனத்திற்குரியது ஏற்புடையது அல்ல வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் உடனடியாக காவல்துறை அதில் 5 பேரை கைது செய்திருக்கிறது சற்றும் தாமதிக்கவில்லை இந்தப் பிரச்சனை மஞ்சகொள்ளையில் நடக்கவில்லை ஆனால் செல்லதுரை மஞ்சகொல்லையை சேர்ந்தவர் என்பதால் அங்கே இருந்தவர்கள் அவரது உறவினர்கள் சிறிது நேரம் வந்து சாலையிலேயே நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள் இந்த நேரத்தில் பாமகவும் வன்னியர் சங்கமும் உள்ளே ஊடுருவி உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார்கள் அவன் இவன் என்று என்னையும் பேசி இருக்கிறார்கள் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி அவர்களும் இரு சமூகத்தினருக்கு இடையே பகையை உண்டு செய்யும் வகையில் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார் இதைக் கேட்டு இதன் அடிப்படையில் தான் ஒரு பெண் ஒரு பெண்மணி விடுதலை சிறுத்தைகளின் கொடிக்கம்பம் இருந்த பீடத்தை கடப்பாரையால் இடிக்க முற்பட்டு இருக்கிறார்கள் காவல்துறையும் அதை தடுத்திருக்கிறது. 

இது தொடர்பாக நடவடிக்கை இல்லாததால் தான் புவனகிரியில் விடுதலை சிறுத்தைகள் திரண்டு ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் அதில் 1, 2 பேர் பாமக எப்படி பேசுமோ அதைப்போல இவர்களும் வெறுப்பை உமிழக்கூடிய வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது வன்மையாக கண்டிக்கிறேன் அந்த நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து ஒரு பெண்மணி செல்வி முருகனை காவல்துறை கைது செய்திருக்கிறது கொடி அறுத்த போதும் நடவடிக்கை இல்லை கம்பத்தை உடைத்த போதும் நடவடிக்கை இல்லை கொடி பீடத்தை உடைத்த போதும் நடவடிக்கை இல்லை உடையூரில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதிலும் நடவடிக்கை இல்லை ஆர்ப்பாட்டத்தின் போது அவதூராக பேசி வன்முறையை தூண்டும் விதமாக பேசி சாதி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை ஆனால் தலித் தரப்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் மற்றவர்கள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை ஒரு நபர் பிடிபட்டதாக சொல்கிறார்கள் அது குறித்து படுத்தவில்லை ஆனால் பாமக நிறுவனர் காவல்துறை விடுதலை சிறுத்தைகளுக்கு சாதகமாக செயல்படுகிறது என பிளேட்டை திருப்பி போடுகிறார்கள் இது அப்பட்டமான பொய் செய்தி தலித் இளைஞர்கள் தான் சாலையில் அமர்ந்து விட்டு மது அருந்தி கொண்டு வம்பு இழுத்தார்கள் என்று சொல்லுகிறார்கள் அது உண்மை அல்ல இருதரப்பார்களும் போதையில் இருந்தார்கள் என்று சொன்னால் கூட சரி இருதரப்பினரும் இப்படி மோதிக் கொள்வதற்கு சண்டையிடுவதற்கு உடைஊரிலே மது ஒரு காரணம் என்று சொல்லாமல் விடுதலை சிறுத்தை கட்சி தான் இதற்கு காரணம் மஞ்ச கொள்ளையிலே இவ்ளையும் தாங்கி கொண்டிருக்க கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மீது கொடிய எடுத்த போதும் அவர்கள் ஆத்திரப்படவில்லை கொடிக்கம்பத்தை அறுத்த போதும் அவர்கள் ஆத்திரப்படவில்லை பீடத்தை உடைத்த போதும் ஆத்திரப்படவில்லை நடவடிக்கை இல்லை 

வன்முறையை தூண்டும் வகையில் அருள்மொழி உள்பட அத்தனை அத்தனை பேரும் பேசி இருக்கிறார்கள் நடவடிக்கை இல்லை விடுதலை சிறுத்தைச்ன கட்சிக்கும் தலித்துக்கும் எதிராக தான் அங்கு காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஆனால் ஒட்டுமொத்தமாக அதை மடைமாற்றம் செய்யும் வகையிலேயே உண்மையைத் திரித்து பாமக நிறுவனர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது அதிர்ச்சி அளிக்கிறது இருத்தாறுப்பாறும் சமூக நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் விருப்பம் விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டத்தில் தனிநபர் தாக்குதலை நடத்தியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் எங்கள் இயக்க தோழர்களையும் கண்டிக்கிறோம் அவ்வாறு பேசக்கூடாது இரு சமூக இடையிலான நல்லிணக்கத்தை நாம் பாதுகாக்க வேண்டும் நமது நோக்கம் அதுவல்ல நம்மை அவர்கள் தூண்டிவிட்டு மீண்டும் ஒரு பதட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் வேண்டுகோள் விடுதலை சிறுத்தைகளை கண்டிக்கின்ற வகையில் அதில் சொல்லக்கூடிய அளவுக்கான நெருக்கடி அவருக்கு இருக்கிறது இந்த சமூகத்திலே உண்மையிலேயே பாமக தான் இதில் தலையீடு செய்து வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்டது அவருக்கும் தெரியும் ஏனென்றால் இந்தப் பிரச்சனையில் அந்த கிராமத்தை பொறுத்தவரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேர்ந்தவர்கள் தான் முதலில் இருந்தே ஈடுபாடு கொண்டிருந்தார்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் சமாதானம் செய்தார்கள் அவர்களுக்காக தான் விடுதலை சிறுத்தை கட்சியும் அது பெரிய அளவில் அழுத்தம் கொடுக்காமல் பேசிக் கொள்ளலாம் பிறகு சுமுகமான தீர்வு காணலாம் என அமைதி காத்தார்கள் என தொல்.திருமாவளவன் கூறினார்.

No comments

Copying is disabled on this page!