Breaking News

விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து ஒற்றுமையாய் பாடுபடுங்கள். 200 அல்ல 234 தொகுதியையும் திமுக வெற்றி பெறும். திருப்பத்தூர் பகுதிகளில் நடைபெற்ற பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக தெற்கு, வடக்கு ஒன்றியங்கள் சார்பில் தனித் தனியாக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இன்று திருப்பத்தூர் திமுக தெற்கு ஒன்றியத்தின் சார்பில் கோட்டையிருப்பிலும், வடக்கு ஒன்றியத்தின் சார்பில் இளையாத்தங்குடியிலும் நடைபெற்ற இந்த பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் சட்டமன்றதொகுதி பொறுப்பாளருமான சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், விராமதி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திடவும், முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கும் வகையிலும், விருப்பு, வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அப்போது 200 அல்ல 234 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன் கேட்டுக் கொண்டார். 

இதில் பாக முகவர்களை நேரடியாக சந்தித்து அவர்களது அலைபேசி எண்களை கேட்டறிந்து ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார். மேலும் வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கணேசன், சிங்கம்புணரி ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக முகவர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!