புதுச்சேரியில் உள்ள முக்கிய வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட வேக தடைகளை அகற்ற முதல்வர் ரங்கசாமி உத்தரவு..!!
புதுச்சேரி இந்திரா காந்தி சதுப்பு முதல் கோரிமேடு எல்லை வரையிலான சாலை தேசிய நெடுஞ்சாலை பிரிவின் வசம் உள்ளது. சாலை பாதுகாப்பு விதிகளின்படி, சாலைகளை கடக்கும் சிறிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். அதன்படி இந்த சாலைகளில் மஞ்சள் நிறத்தில் சிறிய அளவிலான வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
இந்த சாலையில் வாகன நெருக்கடிகள் அதிகம் என்பதால் வாகனங்கள் மிகப் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சிறிய வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் சிறிய வேகத்தடையில் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.
இதற்கிடையே முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த சாலையை அடிக்கடி பயன்படுத்துவதால், அதிர்வு காரணமாக அவருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து, உடனடியாக மஞ்சள் நிற சிறிய வேகத்தடையை அகற்ற உத்தரவிட்டார்.
இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை அதிகாரிகள், மஞ்சள் நிறத்தில் உள்ள சிறிய அளவிலான வேகத்தடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
No comments