தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு போக்குவரத்து கிளை மேலாளரிடம் சமூக செயற்பாட்டாளர் ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார் இதில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் மற்றும் புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரி மனு அளித்தார் குறிப்பாக பொறையார் ஆயப்பாடி சங்கரன் பந்தல் பெரம்பூர் மங்கை நல்லூர் எலந்தங்குடி வழியாக மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவில் மன்னம்பந்தல் வழியாக மயிலாடுதுறை சென்று வரும் அனைத்து அரசு பேருந்துகளும் தடையின்றி குறித்த நேரத்தில் இயக்க வேண்டியும் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தியும் மனு அளித்தார் மேலும் திருவாரூர் சிதம்பரம் கும்பகோணம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை தீபாவளி பண்டிகை ஒட்டி மீண்டும் இயக்கவும் கோரிக்கை வைத்தார்.
No comments