தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை புதுப்பிக்கப்படும் பணியினை சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சின்னமான டேனிஷ் கோட்டை புதுப்பிக்கப்படும் மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை சுற்றுலாத்துறை ஆணையர் சமய மூர்த்தி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.டேனிஷ் கோட்டை அகழ்வைப்பகம் புதுப்பிக்கும் பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் தரமாக பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். ஆய்வின்போது தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜ கஜேந்திரகுமார் பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் தொல்லியல் துறை உதவி பொறியாளர் தினேஷ் மற்றும் வருவாய் துறையினர் இருந்தனர்.
No comments