பேரணாம்பட்டு புதிதாக பதவி ஏற்று கொண்ட வட்டாட்சியரை தமிழ் இன மறுமலர்ச்சிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் க. சந்தோஷ் குமார் மரியாதை நிமித்தம் சந்திப்பு.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகாவில் வட்டாட்சியராக பணியாற்றி வந்த விநாயகமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதனையடுத்து பேர்ணாம்பட்டு தாலுக்கா புதிய வட்டாட்சியராக இல. வடிவேல் பொறுப்பேற்றார் இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பேர்ணாம்பட்டு தாலுக்கா துணை வட்டாட்சியர் ஆக பணியாற்றி வந்தார் இவரின் தலைமையின் கீழ் சுமார் 150 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக சமூகப் பணி செய்தார்கள்.
பின்னர் தனி வட்டாட்சியர்( நடுவர் தீர்ப்பாயம் ) மாவட்ட ஆட்சியரகத்திற்கு பணியம் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் பேரணாம்பட்டு தாலுகாவிற்கு வட்டாட்சியராக பொறுப்பேற்று இருப்பதால் பேர்ணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் மத்தியில் மிகவும் மகிழ்ச்சி இதனையடுத்து தமிழ் இன மறுமலர்ச்சி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் க. சந்தோஷ் குமார் புதிதாக பதவியேற்று உள்ள வட்டாட்சியர் இல. வடிவேல் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments