காட்பாடி போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து காட்பாடி டி. எஸ். பி தலைமையில் சிறப்பு கூட்டம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பொதுமக்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் செங்குட்டை சமுதாயக் கூடத்தில் டி. எஸ். பி. பழனி தலைமையில் நடைபெற்றது, காட்பாடி வட்டக் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தனிப்பிரிவு தலைமை காவலர் கோபிநாத் மற்றும் பொதுமக்கள் இடையே போதைப் பொருள் பழக்கங்களில் இருந்து எவ்வாறு மீள்வது குறித்தும் கடைகளில் ஹான்ஸ் குட்கா பான் மசாலா போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்வோர் மீது எவ்வாறு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிப்பது என்றும் அந்தந்த காவல் நிலையங்களின் தொலைபேசி எண்களை பொதுமக்களுக்கு வழங்கியும் டி. எஸ். பி. பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இதில் 1 வது வார்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அன்பு 4 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா லோகநாதன் 5 வது வார்டு வட்ட செயலாளர் விநாயகம் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments