உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 389 மாணவிகளுக்கு மிதி வண்டி வழங்கும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 389 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் தலைமை தாங்கி 389 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி வரவேற்றார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அம்பிகாபதி, ஜெயினுலாப்தின், ரமேஷ்பாபு, கல்வி குழு தலைவர் இன்ப நிலா, நிர்வாகிகள் குமரவேல், விஜயபூபதி முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் அருணா தொல்காப்பியன், பத்மநாபன் நல்லாசிரியர் அருணா சூரியகுமார், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் கார்த்தியாயினி, ரஞ்சித்குமார், சுப்பிரமணியன், கனகசபை உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments