Breaking News

அமர்ந்திருந்த இருக்கைகள் மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து ஏற்பட்ட விபத்து பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் விரிவாக்கப்பணியில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடை மேம்பாலம் அமைப்பதற்காக அஸ்திவாரம் அமைக்க தோண்டபட்ட பள்ளத்தில் சுமார் 100 அடி நீளத்தில் 6அடி அகலத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் மின்கம்பத்துடன் நடைமேடை சரிந்து ஏற்பட்ட விபத்து பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த சமயத்தில் பயணிகள் ரயிலில் எறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அபாயகரமான நிலையில் செயல்பட்டு வரும் ஆர்.எம்.எஸ் தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்;-

மயிலாடுதுறை ரயில் நிலையம் திருச்சி, சென்னை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்கள் செல்வதற்கான மைய பகுதியாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்து விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒண்ணாவது நடைமேடை அருகே ஆர் எம் எஸ் தபால் நிலையம் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடை மேம்பாலம் அமைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அடித்தளம் அஸ்திவாரம் அமைப்பதற்கு 15 அடி ஆழத்தில் சுமார் நூறு அடி நீளத்தில் குழி தோண்டப்பட்டு பில்லர் அமைப்பதற்கான கம்பி கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. முதலாவது நடைமேடை ஒட்டி குழி தோண்டப்பட்டுள்ளதால் நேற்று இரவு 12.45 மணி அளவில் முதலாவது நடை மேடை 100 அடி நீளத்திற்கு ஆறு அடி அகலத்தில் சரிந்து விழுந்தது. இதில் நடைமேடையில் இருந்த பயணிகள் அமரும் மூன்று இருக்கைகள் ஒரு மின்கம்பத்தடன் நடைமேடை திடீர்என சரிந்து விழுந்துள்ளது. சரிந்து விழுந்த இருக்கைகளில் பயணிகள் அமர்ந்திருந்த நிலையில் அந்த நேரத்தில் வந்த சென்னை செல்லும் அந்தியோதயா ரயிலில் பயணிகள் ஏறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மேலும் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் ஆர் எம் எஸ் என்றழைக்கப்படும் விரைவு தபால் நிலையம் தற்போது ஆபத்தான நிலையில் செயல்பட்டு வருவதால் அங்கு பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள விரைவு தபால் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், முதலாவது நடைமேடையில் ரயில் நிற்கும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் சரியாக போடப்படாததால் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து ரயில் நிலையத்தில் எந்த ஒர அசம்பாவிதமும் ஏற்படாதவாறு விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 1வது நடைமேடை சரிந்து விழுந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

No comments

Copying is disabled on this page!