உலக சைகை மொழி தினத்தை முன்னிட்டு இந்திரா காந்தி அரசு பட்டா மேற்படிப்பு மையம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டியில் பங்கேற்ற காது கேளாத மாணவ மாணவிகளுக்கு இலவச காது கருவி வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டம் மற்றும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தின் காது, மூக்கு,தொண்டை பிரிவு சார்பில் சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு பட்ட மேற்படிப்பு மையத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட காது கேளாத மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை புதுச்சேரி அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் செல்வேல் மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் ராகினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இலவச காது கருவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மருத்துவமனையின் காது,மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments