வில்லியனூரில் இடமாற்றம் செய்யப்பட்ட தீயணைப்பு நிலையத்தை அமைச்சர் சரவணன் குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் திறந்து வைத்தனர்.
வில்லியனூர் ஒதியம்பட்டு சாலையில் அமைந்துள்ள பழைய ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட் புதுச்சேரி தீயணைப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வில்லியனூர் தீயணைப்பு நிலையத்தின் திறப்பு விழா நடந்தது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற விழாவில், இதில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தீயணைப்பு துறை அமைச்சர் சரவணக்குமார் கலந்து கொண்டு தீயணைப்பு நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த விழாவில், தீயணைப்புத் துறை செயலர் கேசவன், உள்துறை சார்பு செயலர் ஹிரன், கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ, நிலைய அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் கோட்ட அதிகாரி மனோகர் நன்றி கூறினார்.
No comments