ஈரோட்டில் அதிகாலையில் நடந்த கோர விபத்து சம்பவ இடத்தில் இரண்டு இளம் பெண்கள் பலி.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வில்லரசம்பட்டி நான்கு ரோடு அருகே சாலையோர மின் கம்பத்தில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்துக்குள்ளானது, இதில் இரண்டு இளம்பெண்கள் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாயினர் உடன் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் கலைச்செல்வன் படுகாயம் அடைந்தார், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் முதல் கட்ட விசாரணையில் கோவையை சேர்ந்த சவுந்தர்யா தனது தோழியுடன் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் சூளையில் நண்பர் வீட்டில் தங்கி உள்ளார், இன்று அதிகாலை காலை, நண்பர் கலைச்செல்வன் காரில் கோவை நோக்கி சென்ற போது வில்லரசம்பட்டி நால்ரோடு என்ற இடத்தில் கார் சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை்நடத்தி வருகின்றனர்
அதிகாலையில் அதிவேகத்தில் வந்த கார் மின்கம்பத்தில் மோதி இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments