ஈரோட்டில் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் முத்தம்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்.
ஈரோடு மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான சென்னிமலை சாலை முத்தம்பாளையம் ஸ்டெம் பார்க் பின்புறம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது, இங்கு முக்கிய நாட்கள் ஆன அமாவாசை பௌர்ணமி போன்ற திதிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்வது வழக்கம் பின்பு ஆலயத்திற்கு வரும் பக்த கோடிகளுக்கு அருள்வாக்கு சுவாமி உதயணன் அருள் வாக்கு கூறுவார்.
இதனைத் தொடர்ந்து நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு தினந்தோறும் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது, இந்நிலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்த கோடிகளுக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
No comments