சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் மஞ்சுவிரட்டு காளைகளுடன் காத்திருப்பு போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினர் 200க்கும் மேற்ப்பட்டோர் கைது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட மஞ்சு விரட்டு திடல் உள்ளது. இந்த மஞ்சு விரட்டு திடலில் வீர சேகர உமயாம்பிகை ஆனிப்பூரம் தேரோட்டத்திற்கு மறுநாள் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.
இந்த மஞ்சுவிரட்டு திடலில் அரசு அலுவலகங்கள் கட்டப் போவதாக தெரியவந்ததை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நாம் தமிழர் கட்சியினர் நான்கு மஞ்சுவிரட்டு மாடுகளுடன் சாக்காட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் வந்தனர் அவர்களை தடுத்த காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
No comments