நவராத்திரி மூன்றாம் நாளை முன்னிட்டு அஷ்ட தசா புஜ மகாலட்சுமி துர்கா அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சதசண்டி மூன்றாம் நாள் யாகம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அடுத்த கருவாழக்கரையில் மகா சதாசிவ பீடம் அமைந்துள்ளது. இங்கே 18 கைகள் உடன் சுமார் 12 அடி உயரத்தில் அஷ்ட தச புஜ மகாலட்சுமி துர்க்கை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. நவராத்திரியை முன்னிட்டு சன்னதியில் சத சண்டி மகாயாகம் நடைபெற்று வருகிறது. நவராத்திரி மூன்றாம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சகசண்டி யாகத்தின் மூன்றாம் நாளில் 13 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஹோமம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments