Breaking News

ஈரோடு மண்டலம் சார்பில் 8 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் திரு.சு.முத்துசாமி.


ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், இன்று (09.10.2024) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் 8 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்திற்கு நகர்ப்புற பேருந்துகள் 9 பேருந்துகள், புறநகர் பேருந்துகள் 36-ம் என மொத்தம் 45 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 17.07.2024 அன்று 15 புதிய பேருந்துகளும், 12.09.2024 அன்று 5 புதிய பேருந்துகளும் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (09.10.2024) ஈரோடு - கோயம்புத்தூர் (ERO-100, Non-Stop) 5 பேருந்துகள், கோயம்புத்தூர் - சேலம் பாயிண்டு -டு- பாயிண்ட (1 to 1, Non-Stop) 3 பேருந்துகள் 61501 8 பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இதில் ஒரு பேருந்தின் விலை ரூ.44.00 இலட்சம் என மொத்தம் ரூ.3.52 கோடி ஆகும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் 37 புற நகர் பேருந்துகளும், 2 நகர பேருந்துகளும் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றப் பொலிவுடன் வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் விடியல் பயணத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, ஈரோடு மண்டலத்தில் 304 நகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாளொன்றிக்கு சுமார் 3.00 இலட்சம் மகளிர் தினசரி கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இத்திட்டம் துவங்கப்பட்டது முதல் நாளது வரை 3407.40 இலட்சம் மகளிர் கட்டணம் இல்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டம் கடந்த 14.03.2024 அன்று முதல் விரிவுபடுத்தப்பட்டு, தாளவாடி மலைப்பகுதியில் 35 கி.மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் 1 புறநகர் பேருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு, நாளொன்றிக்கு சுமார் 582 மகளிர் வீதம் நாளது வரை 92103 மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ். என். இஆப., ஈரோடு மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் திரு.சசிகுமார் (3-ம் மண்டலம்), திரு.தண்டபாணி (4-ம் மண்டலம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மேலாண் இயக்குநர் திரு.ஜோசப் டயஸ், பொது மேலாளர் திரு.தா.மோகன்குமார் (ஈரோடு மண்டலம்), துணை மேலாளர் (வணிகம்) திரு.ஜெகதீஸ், உதவி மேலாளர் திரு.சரவணன் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!