ஈரோடு காளைமாடு சிலை அருகில் விசிகவினர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மாணவர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்த 50-க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாய் மற்றும் தலையணையுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன், மண்டல செயலாளர் சுசி கலையரசன், மாநில பொறுப்பாளர் துரைமா வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் கொடுமுடி பழனிச்சாமி , அக்பர் அலி, பால்ராஜ் ,ஆனந்தன், பைஜல் அஹமது, திருமா குணவளவன், மூர்த்தி, துரை பாலு, சரவணன், ரகுநாதன், ரிச்சர்டு, மணல் முரளி, சந்திரகுமார், பிரவீன் ,வழக்கறிஞர் சுரேஷ் வழக்கறிஞர் எழில் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments