அறிவுசார் குறைபாடு உடைய சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் விளையாட்டுப் போட்டிகள்.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமதி ப.ஜானகி தலைமையில், ராசிபுரம் காவல் துணை கண்கணிப்பாளர் M. விஜயகுமார் DSP, திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் செல்வராஜ், உடற்கல்வி பயிற்றுநர்கள் திரு.வீரா மற்றும் திரு மதி வித்யா , S.சண்முகம் MSW BPEd, அனைக்கும் கரங்கள் திரு மதி ஜாய் ரோசினி, தன லட்சுமி பாடி பிரம்மா உடற் பயிற்சி நிறுவனர், கால்நடை அறுவை சிகிச்சை Dr.K ஜெயந்தி B.V.sc & AH மருத்துவர், திரு மகிழ் பிரபாகரன் மகிழ் குழும நிறுவனங்கள் தி மு க ப.வேலூர், R.விஜயகுமார் ஆர் வி ரூஃபிங் பரமத்தி வேலூர்,AVM சரவணன் உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம், மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் R.D தில்லைகரசன், ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டது.
சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் நாமக்கல் மாவட்ட தலைவர்.திரு DR விஜய குமார், துணைத்தலைவர் திருமதி. சுதர் சினி செயலாளர் திருமதி ஜாய் ரோசினி, பொருளாளர் திருமதி DR உமா மகேஸ்வரி, ஃபேமிலி கமிட்டி தலைவர் திரு M. ராம்கி ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முன் நின்று நடத்தினார்கள். மேலும் மாவட்ட ராசி புரம் அரசு மேல் நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்விசிறப்பு ஒலிம்பிக் பாரத் பயிற்சியாளர்கள், அவர்களும் சிறப்பு குழந்தைகளுக்கான அத்லட்டிக்ஸ், குழுப் போட்டிகளை சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்வில் மற்றும் சிறப்பு பள்ளிகளைச்சேர்ந்த 5 சிறப்பு பயிற்றுநர்கள், சிறப்பு விருந்தினர்கள், மணிமாறன் ஐ.எம்.பி செங்கல் சூளை அதிபர், பிரபாகரன் அவர்கள் வங்கி ஐடிஃப்சி மேனேஜர் நாமக்கல், செந்தமிழ் தகவல் டூடே நாமக்கல், செந்தில் ரிதின் டிரேடர்ஸ் கரூர் இயன்முறை மருத்துவர்கள் என 200 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் மாநில அளவிலும் நடை பெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். நிறைவாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், பாராட்டு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
No comments