திருச்செந்தூர் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க நடைபயண பக்தர்கள் ஓய்விட பூங்கா விரைவில் திறக்கப்படும்! மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.
இக்கூட்டத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, கட்டடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுகளை பொதுமக்கள் அளித்தனர். அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: இந்த மண்டலத்தில் இதுவரை நடைபெற்ற குறைதீர் முகாமில் மொத்தம் 259 மனுக்கள் பெறப்பட்டு அதில் 205 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மீதமுள்ள 54 மனுக்களில் மின்வாரியம் மற்றும் சுகாதாரதுறை உள்ளிட்ட சில துறைகளை சார்ந்த கோரிக்கைகளாகும், அதிலுள்ள குறைகளும் சரிசெய்யபட்டு நிறைவேற்றி கொடுக்கப்படும். மழைகாலங்களில் கோரம்பள்ளம் கண்மாய் திறக்கப்பட்டால் வெள்ளநீர் உப்பாற்று ஓடையில் தடையின்றி சென்று கடலில் கலப்பதற்கு ஏதுவாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூருக்கு ஆன்மிக நடைபயணம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, அவர்கள் தங்கி ஓய்வு எடுக்கும் வகையில் முத்தையாபுரம் ரவுண்டானா அருகில் நடைபயண பக்தர்கள் ஓய்விட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக ஓய்வெடுக்கும் வகையில் நவீன வசதியுடன் இந்த பூங்கா அமைக்கப்படடுள்ளது. விரைவில் அது பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
நிகழ்ச்சியில், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், கண்காணிப்பாளர் குருவையா, நகர்நல அலுவலர் வினோத்ராஜா, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, குழாய் ஆய்வாளர் நிக்சன், திட்ட அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, வெற்றிச்செல்வன், முத்துமாரி, வட்டச்செயலாளர் பிரசாந்த், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன் மற்றும் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments