Breaking News

சேரன் உடற்கல்வியியல் கல்லூரி கபடி போட்டியில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை.


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி இரண்டு நாட்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள சேரன் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 14 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் கலந்து கொண்டன. இதில் கரூர் மாவட்டம் சேரன் உடற்கல்வியியல்  கல்லூரி மாணவ மாணவிகள் கபடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பல்கலைக்கழக அளவில் இரு அணிகளும் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். 

மேலும் ஆண்கள் கபடி அணி கடந்த நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல் இடத்தையும் பெண்கள் கபடி அணி கடந்த இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல் இடத்தையும் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் அனைவரையும் கல்லூரியின் தலைவர் திரு K பெரியசாமி அவர்கள், கல்லூரியின் தாளாளர் திரு K பாண்டியன் அவர்கள், கல்லூரியின் முதல்வர் முனைவர் V அமுதா அவர்கள், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் K ராஜேஷ் குமார் அவர்கள்,  மற்றும் நிர்வாக அலுவலர் முனைவர் M வெங்கடேசன் ஆகியோர் பாராட்டினார்கள். இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். 

No comments

Copying is disabled on this page!