உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஆசிய அளவிலான பென்காக் சிலாட் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீரர்களை, செந்தில்குமார் எம்எல்ஏ சீருடை வழங்கி வாழ்த்தி வழி அனுப்பினார்.
8வது ஆசிய பென்காக் சிலாட் சேம்பியன்சிப் போட்டிகள் இம்மாதம் 10ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் புக்காரா நகரத்தில் நடைப்பெறுகிறது.
இப்போட்டிகளில் இந்திய அணியில் புதுச்சேரி வீரர் மற்றும் வீராங்கனைகள் பிரேம்குமார், பிரவின்குமார், மணிகண்டன், ஹேமா, காவியா, ஜூவிதா, ரஜ்ஜனி, பரமேஸ்வரி, பிரீத்தி ஆகியோர் மற்றும் இந்திய அணியின் மேலாளராக புதுவையை சேர்ந்த அருள்ஜோதி, இந்திய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொள்கின்றனர்.
இதன் வழியனுப்பும் விழா இன்று பாகூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தி வழியனுப்பினார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சூர் பென்காக் சிலாட் அசோசியேஷன் தலைவர் சாந்திலட்சுமி பொதுச்செயலாளர் பச்சையப்பன், நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments