வில்லியனூர் தொகுதியில் சிறகுகள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலச் சங்க பெயர் பலகையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா திறந்து வைத்தார்.
வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சிறகுகள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலச் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராஜசுந்தர், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் தலைவர் அம்பலவாணன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஸ்ரீகாந்த், துணை தலைவர் சரஸ்வதி, துணைச்செயலாளர் திவ்யா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
No comments