உளுந்தூர்பேட்டை திருச்சி சாலையில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக் கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றிய நபரை வளைத்துப்பிடித்த பொதுமக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன் மனைவி சின்ன பொண்ணு வயது 55 இவர் உளுந்தூர்பேட்டை திருச்சி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம்மில் ரூபாய் 37,000 பணம் எடுப்பதற்காக அங்கு சென்றுள்ளார் அப்போது அவருக்கு இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததை பயன்படுத்திக் கொண்ட அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபர் ஒருவர் தான் பணத்தை எடுத்து தருவதாக கூறி அவரிடமிருந்து ஏடிஎம் கார்டு மற்றும் அதன் பின் நம்பரை வாங்கியுள்ளார் பின்னர் இயந்திரம் வேலை செய்யவில்லை எனக் கூறி வேறொரு ஏடிஎம்ஐ தேடிச் செல்லுமாறு கூறிவிட்டு அவர் கொடுத்த ஏடிஎம் கார்டுக்கு பதிலாக போலியான மற்றொரு கார்ட்டை மூதாட்டி இடம் அந்த நபர் கொடுத்துள்ளார்.
அப்போது சுதாரித்துக் கொண்ட அந்த மூதாட்டி உடனடியாக அக்கம் பக்கத்தினர் அழைத்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார் போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள சின்னகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் வயது 32. என்பது தெரிய வந்தது தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜாராமன் இதுபோன்று பல இடங்களில் ஏடிஎம்முக்கு வரும் வயதானவர்கள் மற்றும் விபரம் தெரியாதவர்களை திசை திருப்பி பணத்தை நூதன முறையில் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 20க்கும் மேற்பட்ட போலியான ஏடிஎம் கார்டுகள் மற்றும் பணம் உள்ளவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments