புதுச்சேரி டி.ஐ.ஜி., யாக நியமிக்கப்பட்ட சத்தியசுந்தரம், முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கடந்த செப்., 13ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதில், புதுச்சேரி ஐ.பி.எஸ்., அதிகாரிகளான சீனியர் எஸ்.பி.,க்கள் மணீஷ், சுவாமி சிங்., இருவரும் அருணாசல பிரதேசத்திற்கு மாற்றப்பட்டனர். டில்லியில் பணியாற்றிய ஐ.பி.எஸ்., அதிகாரி சத்தியசுந்தரம் புதுச்சேரி டி.ஐ.ஜி., யாக நியமிக்கப்பட்டார்.புதிய டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற சத்தியசுந்தரம், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இதுபோல் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரையும் சந்தித்தார். புதுச்சேரியில் ஏற்கனவே டி.ஐ.ஜி.,யாக பிரிஜேந்திரகுமார் யாதவ் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments