தீபாவளி பண்டிகைக்கு முன்பாக விவசாய கடன் ரூபாய் 12 கோடி தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகிய மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சராக ரங்கசாமி,
புதுவை மக்களுக்கு நல்ல குடிமை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக ரூபாய் 450 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இரவு செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சாலைகள் கூட சீரமைக்கப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிதி ஒதுக்கி நல்ல தார் சாலை, சிமெண்ட் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகள் பெற்ற கடன் ரூபாய் 13 கோடி உள்ளது. இதில் முதல் கட்டமாக தீபாவளிக்குள் ரூபாய் 12 கோடி தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தீபாவளிக்குள் ரேஷன் கடைகளை திறந்து அரிசி,சர்க்கரை வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம்,அமைச்சர் சரவணகுமார் உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments