உளுந்தூர்பேட்டையில் திமுக அரசை கண்டித்து அ.தி.மு.கவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்தும், சொத்து வரி, குடிநீர் வரி, மின்கட்டண உயர்வுகளை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
காமராஜர் சிலையிலிருந்து அண்ணா சிலை வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக அ.தி.மு.கவினர் கைகளை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில் நடைபெற்றது மேலும் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.கவின கலந்து கொண்டனர்.
No comments