Breaking News

மயிலாடுதுறை அருகே உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 


கல்விக்கடவுளான சரஸ்வதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சரஸ்வதி பூஜை கல்லூரியின் நூலகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது பின்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லூரி வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடையை ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கட்ராமன் வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன்,தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர் ஜி.ரவிசெல்வம், ஏவிசி பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர்கள் எம்.செந்தில்முருகன், ஏ.வளவன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கண்ணன் மற்றும் திரளான பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Copying is disabled on this page!