டாடா மறைவிற்கு முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் தலைமையில் அஞ்சலி!
இந்தியாவின் முதன்மை தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவிற்கு மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், கலந்து கொண்டு ரத்தன் டாட்டா படத்திற்கு மலர் மாலை அணிவித்து டாட்டாவின் பெருமைகளை நினைவு கூர்ந்து பேசினார். நகர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.கே. மாசிலாமணி, ஆர்.கே.சங்கர் சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் ஸ்டிக்கர் செல்வம், ஜெயப்பிரியா சிட்ஸ் ரவீந்திரன், முன்னாள் ராணுவ அதிகாரி மொழையூர் ராஜேந்திரன், பத்திரிகையாளர்கள் பாஸ்கர், சிங்கார முத்துசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் தங்க பழனிச்சாமி, அன்பழகன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments