மயிலாடுதுறையில் இருந்து சென்னை புதிய பொது பேருந்து சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை இயக்கி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையிலிருந்து சென்னை செல்வதற்கு பொது பேருந்து இல்லாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமாரிடம் பொதுமக்கள் சென்னை செல்வதற்கு புதிய பேருந்து அமைத்து தரக் கோரிக்கை மனுவை அளித்தனர். கோரிக்கையை ஏற்ற சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உடனடியாக முறையிட்டு மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம், கடலூர் பாண்டிச்சேரி தாம்பரம் வழியாக சென்னை செல்வதற்கான பொது வழிதடத்தில் புதிய பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்தார். இப்பேருந்து மயிலாடுதுறையிலிருந்து இரவு 10 மணிக்கு தொடங்கி விடியற்காலை 4:15க்கு சென்னை சென்றடையும். அதனை முன்னிட்டு இன்று புதிய பேருந்தை எம் எல் ஏ ராஜகுமார் மற்றும் நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர்கள் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். எம் எல் ஏ புதிய பேருந்தை தானாக இயக்கி 3 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பவும் பேருந்து நிலையத்தை அடைந்தார். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் குமார், அரசு போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் ராஜா, மற்றும் தொமுச பொறுப்பாளர்கள், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments