மயிலாடுதுறை அருகே வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி மற்றும் பூம்புகார் சுற்றுலா தளத்தில் சீரமைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்பிட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.டேனிஷ் கோட்டை புதுப்பிக்கும் பணிகளை இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதே பபோல் பூம்புகார் கடற்கரையில் 1973 ஆம் ஆண்டு சுற்றுலா வளாகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். இங்கு சிலப்பதிகார கலைக்கூடம், பாவை மன்றம், நெடுங்கள் மன்றம், இலஞ்சி மன்றம், கொற்றவை பந்தல், கலங்கரை விளக்கம், தொல்லியல் துறை சார்ந்த அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 23 கோடி 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று பூம்புகார் சுற்றுலா வளாக மேம்பாட்டு பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியுடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பணிகளை முழுமையாக பார்வையிட்ட அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியதாவது சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக மேம்பாட்டுப் பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். தற்போது 60% பணிகள் முடிவடைந்துள்ளது ஜூலை 40 சதவீத பணிகளும் விரைவில் முடிவு அடையும் என தெரிவித்தார் ஆய்வின் போது, சுற்றுலா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தார்.
No comments