ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியிலிருந்து பெங்களூா், மாஹேவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரியிலிருந்து, கா்நாடக மாநிலம் பெங்களூா் செல்ல அக்.13-ஆம் தேதி சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது.
இதேபோல, புதுச்சேரியிலிருந்து மாஹே செல்வதற்கு அக்.30-ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாஹேவிலிருந்து புதுச்சேரிக்கு வரும் நவம்பா் 3-ஆம் தேதி சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் அக்.10-ஆம் தேதி முதல் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என பிஆா்டிசி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
No comments