சீர்காழி அருகே காரைமேடு ஒளிலாயத்தில் ராஜேந்திர சுவாமிகள் குருபூஜை விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்... அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்பு ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு 18 சித்தர்கள் ஒளிலாயத்தில் ராஜேந்திர சுவாமிகள் ஏழாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி உலகத்தில் தனம், தானியம் வேண்டியும், விவசாயம் செழிக்க வலியுறுத்தி ஸ்ரீ குபேர மகாலட்சுமி மகா யாக வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் முன்னாள் எம் எல் ஏ க்கள் பாரதி, சக்தி, சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் மார்க்கோனி, அதிமுக மாவட்ட நிர்வாகி பக்கிரிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாடி செல்வ முத்துக்குமரன், நாடி செந்தமிழன், நாடி மாமல்லன், நாடி பரதன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். முன்னதாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments