புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட முதுநிலை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
இந்தியன் என்டோடான்டிக் சொசைட்டியின் 32 வது தேசிய மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இம்மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக இலவச கருத்தரங்கம் இன்று புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
பல் வேர் நோய் சிகிச்சை துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியின் சேர்மன் புதுவை மாநில முதல்வருமான ரங்கசாமி ஆசியோடு தொடங்கியது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் கென்னடி பாபு தலைமை தாங்க, வேர்நோய் சிகிச்சை துறையின் தலைவர் பேராசிரியர் பிரகாஷ் போர் தாகூர் வரவேற்க பேராசிரியர் சுவாதிகா விருந்தினர்களை கௌரவித்தார்.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட முதுநிலை பேராசிரியர்கள் முதுநிலை மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இந்தியன் எண்டோடான்டிக் சொசைட்டியின் சார்பில் வேணி அசோக் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்த நிகழ்வில் மோகன் புவனேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேர் சிகிச்சை செய்த பற்களின் வலிமை அதிகரிக்கும் வழிமுறைகளை மாணவர்களுக்கு விரிவாக செய்முறையோடு எடுத்து கூறினார்.
இந்த நிகழ்வில் பேராசிரியர் கணேசன் நன்றி உரையாற்றினார். வேர் சிகிச்சை குறித்து நேரடி செய்முறையில் மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது தொடர்ந்து செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
No comments