மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டு பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை அதிகாரிகளோடு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜத்சதுர்வேதி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளதாகவும் அந்தந்த வழித்தடங்களில் வரும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments