புதுச்சேரியில் மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தியவர்களை போலிசார் கைது செய்தனர்.
புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே தனியார் பார் அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் சந்திரன்(38) இவர் கடைக்கு நேற்றுமுன்தினம்(16ம் தேதி) இரவு வந்த 3 ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டினர். சந்திரன் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள், கடையிலிருந்து பாட்டில் உட்பட பொருட்களை எடுத்து சந்திரனை தாக்கினர். சந்திரன் சத்தமிட்டதை தொடர்ந்து அவர்கள் தப்பியோடினர்.
இதில் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனிடையே சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் நடத்தி விசாரணையில் திலாசுப்பேட்டையை சேர்ந்த ரவுடி விஜய் அடையாளம் காணப்பட்டார்.இவர் சில நாட்களுக்கு முன்பு தன்வந்தி நகர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட டியோ கேங்
குழுவில் இருந்து பிரிந்த விஜய் என்பதும் அவர் தனக்கு என ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அடிதடி,மாமூல் வசூல் என தனி ராஜ்ஜியம் நடத்தியது தெரியவந்தது.
இவனை எடுத்து லாஸ்பேட்டை பகுதியில் பதவியில் இருந்த விஜய் மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை கைது செய்தனர் .அப்பொழுது அவர்கள் தப்பி ஓட முயன்றதில் மூவருக்கும் கை கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.
No comments