Breaking News

வேலூரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் 12 டன் இனிப்பு விற்பனை இலக்கு.

வேலூர் மாவட்டம் வேலூரில் வருகின்ற 31 அன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் 12 டன் இனிப்பு வகைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆவின் நிறுவனத்தின் உப பொருட்களான பால்கோவா, மைசூர் பாக்கு, குலோப் ஜாமுன், ரசகுல்லா என பல வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தின் மூலம் 330 கோடிக்கு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணி அனைத்து ஆவின் நிறுவனங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதற்கான அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து இனிப்பு ஆர்டர் பெற முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது 

வேலூரில் உள்ள ஆவினில் தினமும் 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இதில் 80 ஆயிரம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்கும் சென்னைக்கு 10 ஆயிரம் பாலும் அனுப்பப்படுகிறது மீதமுள்ள பாலில் பால் பவுடர் மற்றும் நெய் இனிப்பு வகைகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது, இந்த தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வேலூரில் உள்ள ஆவின் தொழிற்சாலையில் 12 டன்  இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதற்கான பணிகள் முழு வீச்சில்  நடைபெற்று வருகிறது என ஆவின் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதற்கான ஆர்டர்கள் நடைபெற்று வருவதாகவும் அதேபோல் தனியார் துறைகளில் இருந்தும் ஆர்டர்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து ஆர்டர்கள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்


- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ்.விஜயகுமார்.

No comments

Copying is disabled on this page!