காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இன்ஜினியர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுவை சின்னக்காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு படிக்கும் ஒரு சில மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக காலாப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் மஃப்டி உடையில் கண்காணித்தபோது இரண்டு வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமாக உடை அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தனர்.
இரண்டு பேரையும் அவர்களை நெருங்கிய போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இரண்டு பேரையும் காலாப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சின்னக்காலாப்பட்டில் வசிக்கும் ஆகாஷ் வயது 23, என்பவரிடம் கஞ்சாவை வாங்கி வந்து குறிப்பிட்ட மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர். ஒருவர் வில்லியனூர் அரும்பாத்தபுரம் ஜி.என் பாளையத்தைச் சேர்ந்த இளவரசன் மகன் சித்தானந்தம் வயது 19, இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். மற்றொருவர் ரெட்டியார்பாளையம் பவழநகரை சேர்ந்த அன்புலிங்கம் மகன் ரிஷிகாந்த்லிங்கம் வயது 18 இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் இரண்டு பேரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். வடமாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சித்தானந்தம் மற்றும் ரிஷிகாந்த் லிங்கத்திடம் விற்பனை செய்ய கொடுத்த சின்னக்காலப்பட்டு ஆகாஷை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
No comments