Breaking News

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளப்படும்; தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி.


மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளப்படும்; தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை அலைப்பேசி மூலம் தெரிவித்தால் போதும், அவர்களின் வீடுகளுக்கே சென்று மாநகராட்சி அதிகாரிகள் மனுவை பெற்றுக் கொள்வார்கள் என தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது. 

மேலும், கடந்த ஆட்சியில் தூத்துக்குடியில் எந்த பணிகளும் சரியாக நடைபெறவில்லை. ஆனால், தற்போது முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் இதுவரை 2500க்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் நடைபெறவுள்ள சாலை பணிகள் முன்னுரிமை அடிப்படையில் அமைக்கப்படும். 

என்ட் டூ என்ட் சாலை அமைப்பதினால் மாநகராட்சியில் சுற்றுச்சூழல் சுகாதாரம் காக்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளை அலைப்பேசி மூலம் தெரிவித்தால் போதும், மாநகராட்சி அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கோரிக்கை மனுவினை பெற்றுக் கொள்வார்கள் என்றார்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின், ஜெயசீலி, சுப்புலட்சுமி, காந்திமணி, போல்பேட்டை திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஞானமார்ட்டின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!