மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழா புதுக்கோட்டையில் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அரங்கில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. இதில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தார், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கருங்குளம், ஆழ்வார்திருநகரி, புதூர் உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட ஊராட்சிகளில் இருந்து மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் சிறுதானியங்களில் இருந்து சத்தான உணவுகளை சமைத்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினர். விழாவிற்கு, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மல்லிகா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். நடுவர்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, சண்முகசுந்தரி ஆகியோர் செயல்பட்டு சிறந்த குழுக்களை தேர்வு செய்தனர்.
இறுதியில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சியை சேர்ந்த வெண்மலர் மகளிர் சுயஉதவிக்குழுவினர் முதல் பரிசினை பெற்றனர். கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் இரண்டாம் பரிசினை பெற்றனர். புதூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சுயஉதவிக்குழுவினர் மூன்றாம் பரிசினை பெற்றனர். மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூன்றாம் பரிசினை பெற்றனர்.
நிகழ்ச்சியில், மகளிர் திட்ட உதவி அலுவலர் கனகராஜ், வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாளர் முத்துமாரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பரிமளா, விஜயகுமாரி, அன்னசுந்தரி, மரிய அமலி, செல்வசுந்தரி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments