தூத்துக்குடியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.
சமூகநலத்துறையின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக அரங்கில் மாவட்ட சமூகநலத்துறையின், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வட்டார அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் தலைமை வகித்து பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலா முன்னிலை வகித்து பேசினார்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சமூக பணியாளர் கார்த்திகா குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments