காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் 350-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதுகள் உள்ளனர். இவர்களை நல்வழிப்படுத்த சிறைத்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் சிறை துறை ஐஜி ரவி தீப்சிங் சாகர்,தலைமை கண்காணிப்பாளர் அழகேசன் உத்தரவின் பேரில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறைச்சாலை வளாகத்தில் மரம் நடுதல் மற்றும் கைதிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பற்றவர்களுக்கு கண்காணிப்பாளர் பாஸ்கர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் சிறைத்துறை காவலர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments