ஸ்வச்தா ஹி சேவா (தூய்மையே சேவை) இருவாரப்பணி நிறைவு விழா பிரதமர் அறிவித்த திட்டங்களை தமிழில் தர வேண்டும் முதலமைச்சர் உத்தரவு
மத்திய அரசு திட்டங்களின் பெயர்கள் இந்தியில் இருப்பதால் எனக்கும், மக்களுக்கும் தெரியவில்லை என்றும் பிரதமர் அறிவித்த திட்டங்களை தமிழில் தர வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில் ஸ்வச்தா ஹி சேவா (தூய்மையே சேவை) இருவாரப்பணி நிறைவு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று சைக்கிள் பேரணி, மாணவ - மாணவியர் ஓட்டம், உழவர்சந்தை தூய்மைப்பணி உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,பத்தாண்டுகளுக்கு முன்பு தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்ட பெயர் சுவட்சதா ஹி சேவா என இந்தியில் உள்ளது.திட்டங்களின் பெயர் தமிழில் எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். ஆனால், திட்டங்களின் பெயர்கள் தமிழில் இல்லை.திட்டத்தைப் பற்றி நானே தேடுகிறேன். நானே தேடினால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பொதுமக்களுக்கு செல்லும் சேதிகளை தமிழில் சொல்ல வேண்டியது அவசியம். ஆகவே பிரதமர் அறிவித்துள்ள மத்திய அரசின் திட்டங்களை அனைத்து துறைகளிலும் தமிழில் மொழி பெயர்த்து பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
No comments