Breaking News

செம்பனார்கோயில் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு உரையாற்றினார்

 



மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டார். முன்னதாக அவருக்கு மேல வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை உடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


இக்கிராம சபை கூட்டத்தில் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு, தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம்,தூய்மை பாரத இயக்க திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட 14 கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:


   அக்டோபர்-2 காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிராம சபை கூட்டம் என்பது கிராம வளர்ச்சி குறித்து விவாதிக்க மக்களின் பங்களிப்போடு நடத்தப்படுவதாகும். இக்கிராம சபை கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக பயனாளிகளுக்கு காய்கறி விதைகள்,மாடித்தோட்ட தொகுப்புகள் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகர, கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 1077 மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.


முன்னதாக, சமூகநலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம்” பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3000 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 225 மதிப்பிலான காய்கறி விதைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர்,அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!