புதுவையில் அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் கலால் துறை உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, புதுவையில் அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டுமென கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
புதுவை கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2- ஆம் தேதி புதுவை அரசு கலால் துறை ஆணையரின் உத்தரவுபடி, மாநிலத்தில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம், பாா் உள்பட அனைத்து வகை மதுக் கடைகள் மற்றும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பாா்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் (அக்.2) எல்லாக் கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. இதை மீறுபவா்கள் மீது, புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970 -இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments