பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை
புதுச்சேரி அருகே பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பாகூரைச் சோ்ந்தவா் ஷா்மிளா. இவரை மா்ம நபா்கள் டெலிகிராம் செயலியில் தொடா்புகொண்டு வீட்டிலிருந்தபடியே பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்றனராம். அதன்படி, பல முறை ஷா்மிளா குறிப்பிட்ட செயலி முலம் ரூ.40 லட்சம் வரை முதலீடு செய்ததாகத் தெரிகிறது.
முதலீட்டை விட லாபம் இருமடங்கு கிடைத்திருப்பது போல இணையதள வங்கிக் கணக்கில் காட்டப்பட்ட நிலையில், அவரால் முதலீட்டையும், லாபத்தையும் பெறமுடியவில்லையாம். இதுதொடா்பாக, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
No comments