Breaking News

உளுந்தூர்பேட்டையில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா




உளுந்தூர்பேட்டையில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த உணவு திருவிழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் செய்யப்பட்ட கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு மூலம் செய்யப்பட்ட உப்புமா மற்றும் கொழுக்கட்டைகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதே போல் சீரக சம்பா, கருப்பு கவுனி  உளுந்து, அரிசி மூலம் செய்யப்பட்ட பாயாசம் உள்ளிட்ட இனிப்பு பொருட்கள், புதினா, தக்காளி, பிரண்டை துவையல் மற்றும் பாரம்பரிய உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டு அதனை பொதுமக்கள், பள்ளி சிறுவர்கள் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் ப்ரியா பாண்டியன், நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி ரமேஷ்பாபு வழக்கறிஞர் சிவசங்கர், மணிகண்டன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!