Breaking News

சிபிஐ விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டுமென அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்

 



காரைக்கால் கோவில் மோசடி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டுமென அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,ஆட்சியாளர்கள்,அரசியல் பின்புலம் உள்ளவர்கள், அதிகாரிகள், ரியல் எஸ்டேட் அதிபர்களின் கூட்டு சதியால் காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும்,இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு, துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும்‌ என கூறினார்.


வக்போர்டு சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்ததற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் புதுச்சேரி அரசு எந்த கருத்தும் தெரிவிக்காதது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு செய்யும் துரோகம் என குற்றம் சாட்டிய அன்பழகன்,இந்தியாவிலேயே வக்போர்டு அமைக்காத மாநிலம் புதுச்சேரி என்றும் முஸ்லிம் சமுதாய மக்களை காப்பாற்றவும், அவர்களை மீட்டெடுக்கவும் உடனடியாக வக்பு வாரியத்திற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்றார்.

No comments

Copying is disabled on this page!