Breaking News

சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

 


சர்வதேச கிக் பாக்சிங் போட்டி கடலூர் மாவட்ட வீராங்கனைக்கு பாராட்டு உஸ்பெகிஸ்தான் தாஷ் கண்டில் கடந்த செப்டம்பர் 24 முதல் 29 தேதி வரை உலகக்கோப்பை உஸ்பெகிஸ்தான் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் வாக்கோ இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கமிட்டி மூலம் தேர்வான 11 வீரர் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் முன்னாள் அரசு பள்ளி மாணவி எஸ் சுபாஷினி 55 கிலோ எடை பிரிவில் லைட் கான்டெக்ட் மற்றும் கிக் லைட் பிரிவில் வெற்றி பெற்று இரண்டு தங்கப்பதக்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார். வெற்றி பெற்று தாயகம் திரும்பிய எஸ். சுபாஷினியை தமிழ்நாடு வேளாண்துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மாணவியை பாராட்டி சால்வை அணிவித்து மாணவிக்கு தேவையான உபகரணங்களும் வழங்கி மாணவியை ஊக்கப்படுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி தங்க ஆனந்தன் மாவட்ட விளையாட்டு அணி மற்றும் வார்டு கவுன்சிலர் கோ.சதீஷ் கடலூர் மாவட்ட வீரு கிக் பாக்சிங் சங்க தலைவர் சென்சாய் வி. ரங்கநாதன் செயலாளர் பி.சத்யராஜ் டி பிரித்தியூனன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப் போட்டியில் பங்கேற்பதற்கு ஒவ்வொரு வீரர்களுக்கும் தல 2 லட்சம் வீதம் 11 வீரர்களுக்கு தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 22 லட்சம் வழங்கப்பட்டது . சர்வதேச போட்டியில் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு உதவியாக இருந்த தமிழக அரசுக்கு கடலூர் மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம்.சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!